Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியா முழுவதும் விரைவில் மதமாற்ற தடைச்சட்டம் அமலாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கருத்தினை பாஜக பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. பாஜக கட்சியின் தலைவராக பதவி வகித்த போது அமித்ஷா அவ்வாறு கருத்தினை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உள்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையில் அமித்ஷா “இந்தியா முழுவதும் மதம்மாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று தெரிவித்திருப்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இந்தியா முழுவதும் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த வைரல் நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து தந்தி டிவியின் செய்தி ஆசிரியர் அசோகவர்ஷினியிடம் குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து கேட்டபோது, அந்த நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்படுவதாகவும், அதுபோன்ற எந்த செய்தியையும் தற்போதோ முன்னரோ வெளியிடவில்லை தந்தி டிவி என்பதை நமக்கு உறுதி செய்தார்.
இந்தியா முழுவதும் மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 4, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 29, 2025