ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதாராபுரம் தொகுதியில் ஜெயிக்க வழியின்றி மபியில் இருந்து எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்தியதா தமிழக...

தாராபுரம் தொகுதியில் ஜெயிக்க வழியின்றி மபியில் இருந்து எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்தியதா தமிழக பாஜக?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தாராபுரம் தொகுதியில் நின்று ஜெயிக்க வக்கின்றி, மத்தியபிரதேசத்தில் இருந்து எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்பதாக தமிழக பாஜக வெளியிட்டதாகப் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தாராபுரம்
Source: Facebook

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவராக பதவி வகித்து பின்னர் மத்திய இணை அமைச்சராகிய எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Also read: கமல்ஹாசனை முட்டாள் என்றாரா பழ.கருப்பையா?

இந்நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக சார்பில், “தமிழ்நாட்டில் தாராபுரம் தொகுதியில் ஜெயிக்க வக்கில்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து நியமன M.P ஆக பதவியேற்கும் மத்திய இணையமைச்சர் டாக்டர் திரு.L.முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று போஸ்டர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதாக வைரலாகிறது.

தாராபுரம்
Source: Facebook

Facebook Link

தாராபுரம்
Source: Facebook

Facebook Link

தாராபுரம்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தாராபுரம் தொகுதியில் நின்று தமிழகத்தில் ஜெயிக்க வக்கில்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து நியமன எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்பதாகப் பரவும் பாஜக கட்சியின் போஸ்டர் கார்டு குறித்த உண்மையறிய அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆய்வு செய்தோம்.

ஆனால், வேறு இரண்டு வாழ்த்து போஸ்டர்கள் மட்டுமே நமக்கு அவர்களுடைய பக்கத்தில் கிடைத்தது.

மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் கேலிக்குரிய வகையில் இருப்பதால் இதுகுறித்து பாஜகவில் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தரப்பில் பேசினோம்.

Source: WhatsApp

அப்போது, குறிப்பிட்ட போஸ்டர் புகைப்படம் பாஜகவிற்கு எதிராக களமாடும் வகையில் போலியாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருவதாக அவர்களது தரப்பில் உறுதி செய்தனர். தமிழக பாஜக தரப்பில் இவ்வாறு எவ்வித போஸ்டர் வாசகங்களும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தனர்.

Conclusion:

தாராபுரம் தொகுதியில் நின்று தமிழகத்தில் ஜெயிக்க வக்கில்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து நியமன எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்பதாகப் பரவும் பாஜக கட்சியின் போஸ்டர் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

BJP Tamil Nadu

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular