Fact Check
கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்றாரா அண்ணாமலை?
Claim: கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்றார் அண்ணாமலை
Fact: அண்ணாமலை இவ்வாறு எந்த இடத்திலும் பேசவில்லை
“கர்நாடகாவில் நிச்சயம் பாஜக வெற்றி பெறும். ஒருவேளை பாஜக தோல்வி அடைந்தால் நான் காவிரியில் விழுந்து சாகவும் தயார். காங்கிரஸ் தோற்றால் ராகுல் பொறுப்பேற்பாரா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?
Fact Check/Verification
கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்று அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெரிய வந்தது.
அண்ணாமலை நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதை குறித்து கடுமையாக விமர்சித்தார். ஏறக்குறைய 54 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் எந்த ஒரு இடத்திலும் மேற்கண்ட கருத்தை அவர் தெரிவித்திருக்கவில்லை.
இதனையடுத்து பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு இச்செய்தி குறித்து விசாரிக்கையில் அவரும் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்தார்.
Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!
Conclusion
கர்நாடகாவில் பாஜக தோற்றால் காவிரியில் விழுந்து சாகவும் தயார் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவலானது முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Youtube Video from Thanthi TV, Dated May 12, 2023
Phone Conversation with SG Surya, State Secretary, BJP, Dated May 13, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)