Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டனர்.
Fact: இந்நிகழ்வு ஆந்திராவில் 2020-ல் நடந்தது. உண்மையில் மதுபானங்கள் கடத்திய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
“கர்நாடக மாநிலத்தில் போலீஸார் மீது ஹிஜாப் போட்டுக்கொண்டு கல்லெறிந்த சங்கிகளை போலீசார் பிடித்து பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்திய காட்சி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையை உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில், புர்கா அணிந்துக்கொண்டு மதுபானம் கடத்தியவர்களை போலீசார் கைது செய்ததாக குறிப்பிட்டு, Etikala Eliyas E – News எனும் யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 08, 2020 அன்று இதே வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது
தொடர்ந்து தேடியதில், ஈடிவி ஆந்திரப்பிரதேசம் யூடியூப் பக்கத்தில், ஆந்திராவின் கர்னூல் பகுதியில் புர்கா அணிந்து கொண்டு மதுபானம் கடத்தியவர்களை போலீசார் கைது செய்ததாக இந்நிகழ்வு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து, அனந்தபுரம் எஸ்.பி. ஃபக்கீரப்பா காகினெல்லியும் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்திருப்பதை காண முடிந்தது. “தெலங்கானாவிலிருந்து ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் பகுதிக்கு புர்கா அணிந்திருக்கும் அந்த இளைஞர் சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தியதை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அவரை பிடித்துள்ளனர். இந்த வழக்கானது 07/08/2020 அன்று கர்னூல் தாலுக்கா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த டிவீட்டில் அவர் தெரிவித்திருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகுவது யாதெனில்,
கர்நாடகத்தில் ஹிஜாப் சர்ச்சை வெடித்தபோது வைரலாகும் இதே வீடியோவானது இதே தகவலுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அச்சமயத்தில் இது தவறானத் தகவல் என்று நியூஸ்செக்கார் சார்பில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது கர்நாடக தேர்தல் நடக்கும் இவ்வேளையில் மீண்டும் இவ்வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube video, from Etikala Eliyas E – News, Dated August 08, 2020
Youtube video, from ETV News Andhra Pradesh, Dated August 08, 2020
Tweet, from Dr.Fakkeerappa Kaginelli, Superintendent of Police, Anantapuram, Dated August 16, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 7, 2025