வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஅண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் கிடைத்துள்ளது.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

“கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன” என்றுகுறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில்  10  ஓட்டே கிடைத்ததாக வைரலாகும்  நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@isai_
அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில்  10  ஓட்டே கிடைத்ததாக வைரலாகும்  நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/vijayamirtharaj.t
அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில்  10  ஓட்டே கிடைத்ததாக வைரலாகும்  நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/vantha.karthik

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?

Fact Check/Verification

அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக வைரலாகும் நியூஸ்கார்டில் கிட்டூர் தொகுதியில் ஒரு பூத் என்று குறிப்பிடப்பட்டிருந்து. ஆனால் அது எந்த பூத் என்று குறிப்பிடப்படவில்லை. இதுக்குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை. எனவே வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.

வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் இந்த நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.  

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்தோம். அவர் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தெரிவிக்கப்பட்டது.

Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!

Conclusion

அண்ணாமலை பிரச்சாரம் செய்த பகுதியில் 10 ஓட்டே கிடைத்ததாக வைரலாகும்  நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post from News 7 Tamil, Dated May 13, 2023
Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated May 13, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular