ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்றாரா அண்ணாமலை?

பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

“அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடதவர்கள், ஆடம்பரப் பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன்?”என்று அண்ணாமலை கேட்டதாக தமிழக பாஜகவின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து உண்மையிலேயே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தமிழக பாஜக வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில், அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என சொன்னதாக அறிகிறேன். பாஜகவை திமுக தொட்டு பார்க்கட்டும், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்!” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசி இருந்தார்.

இத்தகவலினை தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.  அதற்கு அவர், ”இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை”  என்று விளக்கமளித்தார்.

Also Read: முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!

Conclusion

பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

BJP Tamilnadu

CTR Nirmal Kumar, BJP IT Wing President

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular