வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

HomeFact Checkமுதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனியன்று ( 23/10/2013) சென்னை கண்ணகி நகர் அரசு பேருந்தில் திடீரென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வானது ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது.

ஆனால் சமூக ஊடகங்களில் சிலர் திடீர் ஆய்வில் எப்படி பேருந்தை அலங்காரம் செய்தீர்கள்? என்று கேலி செய்து, முதல்வர் பேருந்தில் மக்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் - 2

Twitter Link | Archive Link

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் -

Twitter Link | Archive Link

Also Read: சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தமிழக முதல்வரின் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இதில் வைரலாகும் படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை நம்மால் அறிய முடிந்தது.  விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த கு.ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த 2019 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதனையடுத்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்திக்கு ஆதரவாக தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டலின் அவர்கள் பேருந்தில் ஏறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஸ்டாலின் பேருந்தில் வாக்கு சேகரித்தது குறித்து dtnext.in இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில் வைரலாகும் படம் இடம்பெற்றிருப்பதை காண முடிகின்றது.

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் படத்தின் உண்மைத்தன்மை

Also Read: அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!

Conclusion

தமிழக முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

இதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

DT Next

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular