Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் கேள்வி கேட்ட பெண்களை மிரட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சிகளை சார்ந்த பலர் நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களைச் சந்தித்தபோது, அவரிடம் பெண்மணிகள் சிலர் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் கோபமடைந்து அவர்களை மிரட்டியதாகவும் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
அண்ணாமலை தன்னிடம் கேள்வி கேட்ட பெண்களை மிரட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து தீவிரமாக தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என தெரிய வந்தது, அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர்பக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து, சம்பவ நடத்தில் நடந்தவைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவ்வீடியோவில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டதுபோல் வாக்குவாதங்களோ, அல்லது மிரட்டல்களோ இல்லை. பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருள் கொடுக்கப்படுவதாகவே இருந்தது.
Also Read: 2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Conclusion
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னிடம் கேள்வி கேட்ட பெண்களை மிரட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
K.Annamalai, Tamilnadu BJP President
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.