ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பணம் கொடுத்து ஆள் சேர்க்கப்படுகிறதா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பணம் கொடுத்து ஆள் சேர்க்கப்படுகிறதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.350 கொடுத்து ஆள் சேர்க்கப்படுவதாக கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

டெல்லி சலோ குறித்து பரவும் வீடியோ.

Fact Check/ Verification

புதிதாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டமானது ஏறக்குறைய இரணடு வாரங்களாக தொடர்ந்து  நடைப்பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் இப்போராட்டம் குறித்து பலரும் பல கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வகையில்  இப்போராட்டத்தில் கலந்துக்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.350 கூலி என்று கூறி அழைத்து வரப்பட்டதாகவும், அந்த கூலித் தராப்படாததால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவ்வீடியோவின் உண்மைத்தனமைக் குறித்து அறிய இவ்வீடியோவை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  வீடியோவில் காணப்படும் நபர்கள் ஆம் ஆத்மி கட்சியின் தொப்பியும், டீ சர்ட்டையும் அணிந்தவாறு உள்ளனர்.   

டெல்லி சலோ போராட்டத்தில் இதுவரை எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் நேரிடையாக பங்குப்பெறவில்லை. வெறும் விவசாயிகள் மட்டுமே இதுவரை இப்போராட்டத்தில் உள்ளனர்.  இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ தவறானதாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.

ஆகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டதென்பதை தீவிரமாக ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில்,  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ பழைய வீடியோ எனும் உண்மை நமக்குப் புலப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊர்வலம் முடிந்தப்பின், தங்களுக்கு தரப்படுவதாக கூறப்பட்ட ரூ.350 பணமும், உணவும் தரப்படவில்லை என்று ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்கள் தகராறு செய்தனர். இந்நிகழ்வு குறித்து அச்சமயம் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.

ANI NEWS-ல் வந்தச் செய்தி:

Courtesy: ANI News

மேலே காணப்படும் வீடியோவைக் கண்டப்பின், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவானது டெல்லி சலோ போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும்,  அது 2018-யில் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதையும் நம்மால் தெளிவாக உணர முடிகிறது.

 Conclusion

சமூக வலைத்தளங்களில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.350 கொடுத்து ஆள் சேர்க்கப்படுவதாக கூறி பரப்பப்படும் வீடியோ பொய்யானது என்பதையும், அது 2018-யில் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/100008278565016/videos/2889202194699038

Twitter Profile: https://twitter.com/sreedar/status/1335256324741873664

Twitter Profile: https://twitter.com/balup13248255/status/1335093772217028608

ANI News: https://www.youtube.com/watch?v=mJBkQHn_PSc


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular