Fact Check
விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!

Claim: விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்
Fact: அப்படம் விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பு பங்களாதேஷில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
“டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள் தவறி பாத்திரத்தை துளைத்திருக்கும் காட்சி. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளை சுட்டுக் கொல்லும் அரசை எதிர்த்து அணி திரள்வோம்! சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டு புகைப்படம்ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

