Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாபர் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவமனை கட்டவிருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

“பாபர் மசூதி இடிப்பு” இந்தியாவில் யாராலும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் நாள் கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பினர் பாபர் மசூதியை இடித்தனர்.
இது இந்து முஸ்லீம்களுக்கிடையே மிகப்பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்தியது. இக்கலவரத்தில் ஏறத்தாழ 2000 பேர் உயிரிழந்தனர்.
1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய அந்நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. அவ்விடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அதாவது அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக்ஃபு வாரியத்துக்கா என்பதே வழக்கு.
2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும், இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பில் திருப்தி இல்லாததால் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு, உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்து சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், மசூதி கட்ட முஸ்லிம் தரப்புக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ம் ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது.
இப்போது முஸ்லீம் அமைப்புக்கு வழங்கப்பட்ட இடத்தில் மருத்துவமனை கட்டவிருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை உத்திரப்பிரதேச வக்ஃபூ வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சையத் முகமது அவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அவ்விடத்தில் மசூதியுடன் நூலகம், மற்றும் மருத்துவமனை கட்டவிருப்பதாக வந்த மற்றொருச் செய்திக் குறித்துக் கேட்டதற்கு, அதற்கானத் வேண்டுகோள்கள் மட்டுமே வந்துள்ளது. அதுக்குறித்து இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
நம் விரிவான விசாரணைக்குப்பின் வைரலான செய்தியில் வந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் அதுக்குறித்து எவ்வித முடிவும் தற்சமயம் எடுக்கப்படவில்லை என்றும் நமக்குத் தெளிவாகிறது.
Facebook Profile: https://www.facebook.com/TowheedOodagathurai/photos/a.208759506325357/813783112489657/
Twtter Profile: https://twitter.com/FastNew41406920/status/1291747730184761344
Twtter Profile: https://twitter.com/Syedabudtahir/status/1291730109779652609
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
August 13, 2020
Ramkumar Kaliamurthy
February 19, 2021
Ramkumar Kaliamurthy
August 19, 2020