Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
டெல்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டத்தை நிறுத்துவதற்காக ஆளும் மத்திய அரசு ராணுவப் படையை அனுப்பி வைத்துள்ளதாகவும், டெல்லி நோக்கி அணிவகுக்கும் ராணுவ வாகனங்கள் இவை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டெல்லியில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டம் குறித்து பரவும் போலிச் செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு அங்கே ராணுவப்படையை குவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக பயணிக்கும் ராணுவ வாகனங்கள் என்று வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகின்றது. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உண்மையில், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதா? பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அந்த வீடியோவின் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி அவற்றை முதலில் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்த்தோம். மேலும், இந்திய ராணுவம் தொடர்பான சமூக வலைத்தளப்பக்கங்களையும் நாம் ஆராய்ந்து பார்த்தோம்.
இந்நிலையில், பிஐபி (Press information bureau) வெளியிட்டுள்ள உண்மையறியும் சோதனையின் லிங்க் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதன்படி, மேற்கண்ட வீடியோவில் குறிப்பிடப்படும் செய்தி தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் இந்த குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நாங்கள் செய்தி வெளியிட்டுள்ளோம். அதில், இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் கூற்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த குறிப்பிட்ட வீடியோ செய்தி முற்றிலும் தவறானதாகும்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடக்க மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி வைத்திருப்பதாக வலம் வரும் இந்த வீடியோ முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு விளக்கியுள்ளோம்.
PIB: https://twitter.com/PIBFactCheck/status/1337342353103851522?s=20
Additional Directorate General of Public Information, IHQ of MoD (Army): https://twitter.com/adgpi
Ministry of Home Affairs
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 6, 2024
Ishwarachandra B G
February 27, 2024
Vasudha Beri
February 26, 2024