வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

HomeFact Checkஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஓடும் நர்மதா நதியில் ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன.

Fact: வைரலாகும் வீடியோ Michael Grab என்கிற கலைஞரின் வடிவமைப்பாகும். அதற்கும் நர்மதா நதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @NaMo_Bharathan

X Link/Archived Link

Screenshot from X @HalwaMjpt

X Link/Archived Link

Screenshot X @Babubabuji16

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?

Fact Check/Verification

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கிராவிட்டி க்ளூ (Gravity Glue) என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15ஆம் தேதியன்று இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. “Stone Balance By Michael Grab” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Counter Balance என்கிற தத்துவத்தின்படி Center of Gravityயை அடிப்படையாகக் கொண்டு Stone Balancing கலைஞரான Michael Grab வடிவமைத்த உருவாக்கம் இது என்பதும் தெளிவாகியது.

மேலும், குறிப்பிட்ட Gravity Glue பக்கமே மைக்கேல் கிராப்புடையது என்பதையும் அவரது இணையதளம் மூலமாக அறிந்து கொண்டோம்.

கற்களின் தன்மையைக் கொண்டு அவற்றை வடிவமைப்புகளாக மாற்றும் கலைஞர் இவர் என்பதையும் இவருடைய பேட்டிகளில் இருந்து அறிய முடிகிறது.

இவருடைய வடிவமைப்பே நர்மதையில் இயற்கையாக அமைந்திருக்கும் கற்களின் வடிவமைப்பு என்பதாக தவறாக பரவுகிறது.

Also Read: மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Conclusion

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram Post From, Gravity Glue, Dated August 19, 2019
Facebook Post From, Gravity Glue, Dated August 15, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
   
 

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular