ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகுஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதா?

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Fact: வைரலாகும் வீடியோ கொல்கத்தாவில் எடுக்கப்பட்டதாகும்.

“மதிப்பு மிக்க குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வாலுடையசூரத் குடோனில் கைப்பற்றியபணம்மூன்று நாட்களாக எண்ணப்படுகிறது. இதுதான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணம். அடிப்பது கொள்ளைபேசுவது நீதி நேர்மை!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from Twitter@KannappanDMK2

Twitter Link | Archived Link

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from Twitter@reporter_hameed

Twitter Link | Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வீடியோ வைராலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக சீக்கர் அகர்வால் எனும் பெயரில் பாஜகவில் யாரேனும் உள்ளனரா என தேடினோம். இதில் உத்திரப்பிரதேசத்தில் ஷிக்கர் அகர்வால் எனும் பெயரில் ஒருவர் பாஜகவில் இருப்பதாக அறிய முடிந்தது. இவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிந்தது.

ஆனால் குஜராத்தில் இப்பெயரில் எந்த ஒரு பாஜக பிரமுகரும் இருப்பதாக நமக்கு தரவுகள் கிடைக்கவில்லை. அதேபோல் ஷிக்கர் அகர்வால் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்ததாகவும் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

ஆகவே இதனையடுத்து வைரலாகும் வீடியோவை புகைப்படங்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில்  “Mobile Gaming App Scam: ED Recovers Massive Cash From Kolkata Businessman Linked To E-Nuggets App” என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் வீடியோத் தகவல்

சென்ற வருடம் செப்டம்பரில் கொல்கத்தாவை சார்ந்த ஆமிர்கான் என்பவர் E-Nuggets எனும் கேமிங் செயலியை பயன்படுத்தி மாபெரும் ஊழலை செய்ததாக கூறி அமலாக்கத் துறை இவர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து 7 கோடி மதிப்புடைய பணம் மற்றும் சொத்துப் பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்தே இல்லாத பாஜக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஆமீர்கான் வீட்டிலிருந்து பணம் பறிமுதல் செய்தது குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

மேலும், இவ்வீடியோவானது ஆம் ஆத்மி தலைவர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி சென்ற வருடமே சமூக ஊடகங்களில் பரவியது. அச்சமயத்தில் நியூஸ்செக்கரில் இதுக்குறித்து ஆய்வு செய்து இத்தகவல் பொய்யானது என்று தெளிவு செய்துள்ளோம். அதுக்குறித்த செய்தியை இங்கே காணலாம்.

Also Read: இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

குஜராத் பாஜக தலைவர் சீக்கர் அகர்வால் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from
India Today|
Report from The Print
Report from NDTV
Report from Hindustan Times

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular