பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இளவயது படம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரவும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
வானதி சீனிவாசன் இளவயது படம் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, வானதி சீனிவாசனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்பில் அப்படம் குறித்து விசாரித்தோம். அவர் “இப்படம் போலியானது, அப்படத்திலிருப்பது நானல்ல” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் முகம் வழக்கத்துக்கு மாறாக சற்று பெரிதாக இருப்பதையும், வழவழப்பாக இருப்பதையும் கவனிக்க முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முகமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்பட்டது.
அதை தெளிவு செய்ய வைரலாகும் படத்தை Sightengine AI அறியும் இணையத்தளம் வாயிலாக பரிசோதித்தோம். அதில் வைரலாகும் படத்தில் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முகமாற்றம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது.

தொடர்ந்து Hive Moderation இணையத்தளம் வழியாக சோதித்தோம். அத்தளத்தில் வைரலாகும் படம் 93.1 சதவீதம் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்பட்ட டீப்ஃபேக் படம் எனும் முடிவு கிடைத்தது.

Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இளவயது படம் என்று கூறி வைரலாகும் புகைப்படம் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முகம் மாற்றப்பட்ட போலி படமாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Vanathi Srinivasan, National President, Mahila Morcha, BJP
Sightengine
Hive Moderation
Self Analysis