திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் ஆ.ராசாவின் தலை மற்றொரு மற்றொரு படத்தின் மீது பொருத்தப்பட்டு வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்து அப்படம் குறித்து தேடினோம். இத்தேடலில் அப்படத்தில் இருப்பவர்கள் சிவசேனா (யூபிடி) கட்சியின் இளைஞரணி தலைவரான ஆதித்யா தாக்கரே மற்றும் என்சிபி – எஸ்பி கட்சியை சேர்ந்த எம்.பி.யான சுப்ரியா சுலே என அறிய முடிந்தது.
இப்படத்தை பயன்படுத்தி அமர் உஜாலா எனும் இணைய ஊடகத்தில் நவம்பர் 27, 2019 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வெற்றி பெற்று முதல் நாள் சட்டசபை கூட்டத்திற்கு வரும்போது சுப்ரியா சுலே சிவசேனா கட்சியினரை வரவேற்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இம்பேக்ட் நியூஸ் எனும் இணைய ஊடகத்திலும் இதே படத்தை பயன்படுத்தி நவம்பர் 28, 2019 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் நவம்பர் 27, 2019 அன்று இந்தியா டுடே யூடியூப் பக்கத்திலும் சுப்ரியா சுலே ஆதித்யா தாக்கரேவை கட்டியணைத்தது குறித்த செய்தி வீடியோவுடன் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ஆ.ராசா அல்ல; ஆதித்யா தாக்கரேதான் என்பது உறுதியாகின்றது. அப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் வைரலாகும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Also Read: தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசினாரா?
Conclusion
ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
2019 ஆம் ஆண்டில் சிவசேனா (யூபிடி) கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரேவும், என்சிபி – எஸ்பி எம்.பி.யான சுப்ரியா சுலேவும் மரியாதை நிமித்தமாக கட்டியணைத்த படத்தை எடிட் செய்தே அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Amar Ujala, dated November 27, 2019
Report by Impact News, November 28, 2019
YouTube Video by India Today, November 27, 2019
Self Analysis