Fact Check
லக்னோவில் சாலையில் படகு செல்வதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim: லக்னோவில் சாலையில் படகு செல்வதாக பரவும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் படகு AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பப்பட்ட வீடியோவாகும்.
”மோடி 3.0 வெற்றிகரமாக உபி லக்னோ வில் செயல்பட்ட போது…. ஸ்பீட் போட் விட்டு அண்ணாமலை யோட துடுப்பு படகுக்கு வேலை இல்லாம பண்ணிட்டாங்களே பாவிங்க” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
லக்னோவில் சாலையில் படகு செல்வதாக வைரலாகும் வீடியோவைதனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் lucknow_zone_ என்ற பயனை ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ ஜூலை 07, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலேயே வீடியோவில் வரும் படகு AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து Maybe’s AI Art Detector இணையத்தளத்தில் இவ்வீடியோவில் வரும் படகு குறித்து ஆராய்கையில் அப்படகானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என பதில் கிடைத்தது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?
Conclusion
லக்னோவில் சாலையில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வீடியோவில் காணப்படும் படகு அது AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Maybe’s AI Art Detector
Instagram post from the user, lucknow_zone_, Dated July 07, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)