மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தமிழக ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் போன்ற பாஜகவின் தேசியத் தலைவர்கள் தமிழகம் வந்தனர்.
இவ்வாறு பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த அமித் ஷா, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று பேசியதாகக் கூறி புதிய தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/7C8Bo

Archive Link: https://archive.ph/i6pI1

Archive Link: https://archive.ph/eC2BT
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து அமித் ஷா பேசினாரா என்பதை அறிய, புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இச்செய்தி குறித்து தேடினோம்.
இந்தத் தேடலில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.
மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஏப்ரல் 1 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் அமித் ஷா பேசும்போது, “தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியை விட சிறந்த தலைவர் இல்லை” என்று பேசியுள்ளார். இத்தகவல் புகைப்படச் செய்தியாக புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அமித் ஷா பேசியதாக சமூக வலைத்தளத் தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அமித் ஷா பேசியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தியானது, எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1377570103449907200
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)