சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkஇலங்கைத் தமிழர்களுக்கு 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததா மோடி அரசு?

இலங்கைத் தமிழர்களுக்கு 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததா மோடி அரசு?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இலங்கைத் தமிழர்களுக்கு மோடி அரசு 50 இலட்சம் வீடுகளை கட்டித் தந்ததாக அமித்ஷா பேசியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் குறித்து அமித்ஷா பேச்சு
Source: Twitter

Fact Check/Verification

பாஜகவின் மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக கடந்த 21/11/2020 அன்று சென்னை வந்தார். அவருக்கு ஆளும் அதிமுக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமித்ஷா அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்ற விழாவில் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசும்போது இந்தி மொழியிலேயே பேசினார். அவரின் பேச்சை பாஜக தலைவர் ஒருவர் மொழிப்பெயர்த்தார்.

அமித் ஷா அவர்கள் பேசுகையில்,  ஒரு இடத்தில் (ஏறக்குறைய 39 ஆவது நிமிடத்தில்),  இலங்கைத் தமிழர்களுக்கு மோடி அரசு சார்பில் 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்தது என்று பேசியதாக மொழிப் பெயர்ப்பாளர் மொழிப் பெயர்த்தார்.

அமித் ஷா அவர்கள் பேசியுள்ள இந்த விஷயமானது எத்தனை சதவீதம் உண்மை என்பதை அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

இலங்கைத் தமிழர்களுக்கு மோடி அரசு சார்பில் 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததாக அமித்ஷா பேசியதைத் தொடர்ந்து இத்தகவலை ஆய்வு செய்தோம்.

அவ்வாறு ஆய்வு செய்ததில் மொழிப்பெயர்ப்பாளர் 50 ஆயிரம் வீடுகள் என்பதற்கு பதிலாக, 50 இலட்சம் என்று தவறாக மொழிப்பெயர்த்துள்ளார் என்கிற உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

இதன்பின்  50 ஆயிரம் வீடுகளை மோடி அரசு இலங்கைத் தமிழர்களுக்கு கட்டிக் கொடுத்ததா என்பது குறித்து ஆராய்ந்தோம். அவ்வாறு ஆராய்ந்ததில், அமித்ஷா அவர்களின் இந்த கூற்றில் சில விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்கிற உண்மை நமக்குத் தெரிய வந்தது.

உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் இந்த திட்டமானது 2010 ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே

இந்தியா வந்தபோது, மன்மோகன் சிங் அவர்களால் கையெழுத்திடப்பட்டத் திட்டமாகும். இத்தகவலானது இலங்கை அரசின் Consulate General of India என்ற இணையத் தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வீடுகள் குறித்த இணையத்தளப் பதிவு.
Source: Consulate General of India

மேலும் High Commission Of India எனும் இணையத்தளத்தில் இந்த திட்டம் குறித்த தெளிவான விளக்கம் ஒன்று தரப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், இத்திட்டமானது நான்கு கட்டங்களாக நடைப்பெற்றுள்ளது.

முதல் கட்டத்தில் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது  2012 ஜூலை மாதம் முடிவுற்றுள்ளது.

இரண்டாம் கட்டமானது அக்டோபர் 2 ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு தொடங்கி, 2018 டிசம்பர் மாதம் முடிவுற்றுள்ளது. இதில் 45 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமானது ஏப்ரல் 2016-யில் கையெழுத்திடப்பட்டு,  2016 அக்டோபரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் தான் மோடி அரசு இத்திட்டத்திற்குள் வந்துள்ளது. இதில் மீதமுள்ள 4 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்டக் காலத்திற்குள் 2300 வீடுகளின் கட்டுமானப் பணி மட்டுமே நிறைவடைந்து, மீதமுள்ள வேலைகள் நிறைவடையாமலேயே இருந்துள்ளது.

இதன்பின் 2017 ஆம் ஆண்டில் மோடி அவர்கள் இலங்கைக்கு பயணம் செய்தபோது, கூடுதலாக மேலும் 10 ஆயிரம் வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறாக மொத்தம் 60 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு கட்டித் தந்துள்ளது.

 Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு 60,ஆயிரம் வீடுகளைக் கட்டித் தந்தது உண்மையே. ஆனால் இத்திட்டமானது அமித்ஷா அவர்கள் கூறியது போல் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது அல்ல, அது மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டதாகும்.    

Result: Misleading

Our Sources

Amit Sha: https://twitter.com/AmitShah/status/1330123391563665409

Consulate General of India: https://www.cgijaffna.gov.in/news/detail/5

High Commission Of India: https://hcicolombo.gov.in/indian_housing


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular