Claim இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் – கருத்துக்கணிப்பு முடிவுகள் Fact வைரலாகும் கருத்துக்கணிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும்.
இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள்” என்பதாக இந்த கருத்துக்கணிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?
Fact Check/Verification
இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என்று பரவும் கருத்துக்கணிப்பு புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் கருத்துக்கணிப்பு தந்தி டிவி வெளியிட்டிருந்தது என்று பரவிய நிலையில் தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் பார்வையிட்டோம்.
அப்போது, கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் 19 அன்று தந்தி டிவி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த கருத்துக்கணிப்பை “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா?” என்று வெளியிட்டிருந்தது.
குறிப்பிட்ட கருத்துக்கணிப்பே புதியதாகப் பரவி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion
இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் என்று பரவும் கருத்துக்கணிப்பு புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources Twitter Post From, Thanthi Tv, Dated November 19, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)