ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?

Fact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனர்
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும்.

ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்தில் நடந்த காங்கிரஸ் எம்பி.கள் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்தார்.  அச்சமயத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவரை வரவேற்கும்போது சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.யானகார்த்தி சிதம்பரமும் வரவேற்றார். ஆனால் ராகுல் காந்தி அவருக்கு முகம் கொடுக்காமல், அவர் கை குலுக்க முயன்றதை கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்றார்.

இந்த வீடியோவானது ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து, பலரும் இதை பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், “கார்த்தி சிதம்பரம் மேல அக்கறை காட்டுற சங்கிகளா, அந்த நிக்கிற மனுசன் யாருய்யா!!” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. அப்படத்தில் மோடியும் அமித் ஷாவும் மேடையில் உட்கார்ந்திருக்க அத்வானி நிற்பதாக இருந்தது.

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@slbala
பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@SkSoundhar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: சாவர்க்கர் பேரனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சாவர்க்கர் பற்றிய ட்வீட்களை டெலிட் செய்தாரா ராகுல் காந்தி?

Factcheck / Verification

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். இத்தேடலில் இப்படமானது 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த பாஜக தேசிய கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை டெலிகிராஃப் ஆன்லைன் வாயிலாக அறிய முடிந்தது.

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengram from Telegraph Online

இதனை அடிப்படையாக வைத்து நமது அடுத்தக்கட்ட தேடலை தொடங்கினோம். இத்தேடலில் இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கெட்டி இமேஜஸ் தளத்தில் காண முடிந்தது.

அதில் அத்வானி, மோடி, அமித் ஷா ஆகிய மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் படங்களும் இடம்பெற்றிருந்தது.

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Getty Images

அதேபோல் அத்வானி அமித் ஷாவுக்கு மாலை போடும் படமும், சால்வை அணிவிக்கும் படமும் அதில் காணப்பட்டது.  

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Getty Images
பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல்
Screengrab from Getty Images

தொடர்ந்து தேடுகையில் 2014 ஆம் நடந்த இந்த கூட்டத்தின் வீடியோவானது பாரத ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் பிரதமர் மோடி அத்வானியிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளும் காட்சிகளை நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Conclusion

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from The Telegraph Online, Dated 03/04/19
Getty Images
YouTube Video from Bharatiya Janata Party, Dated 09/08/2014

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular