திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact CheckViralஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்.

Fact: வைரலாகும் வீடியோவிலிருப்பது சீனாவில் இருக்கும் மேம்பாலமாகும்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் கட்டப்பட்ட மேம்பாலம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்.

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் ஹைலைட்ஸ் சைனா எனும் யூடியூப் பக்கத்தில் சீனாவின் பேய்பாஞ்சியாங் பாலம் என்று குறிப்பிட்டு வைரலாகும் இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்.
Screengrab from YouTube video by HIGHLIGHTS CHINA

தொடர்ந்து தேடுகையில் People’s Daily, China எனும் பேஸ்புக் பக்கத்தில் உலகின் உயரமான பாலம் என்று குறிப்பிட்டு இதே பாலத்தின் வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்பதிவிலும் இப்பாலம் சீனாவில் இருப்பதாகவும், இதன் பெயர் பேய்பாஞ்சியாங் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்.

இதனையடுத்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, மற்றும் சைனா டெய்லி உள்ளிட்ட ஊடகங்களிலும் இப்பாலம் குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இப்பாலம் சீனாவில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

Conclusion

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம் என்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் பாலம் உண்மையில் சீனாவில் கட்டப்பட்ட பேய்பாஞ்சியாங் பாலமாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
YouTube Video By HIGHLIGHTS CHINA, Dated April 30, 2023
Facebook Post By People’s Daily, China, Dated May 27, 2021
Report By Times of India, Dated September 21, 2024
Report By China Daily, Dated September 22, 2018

இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular