Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உதயநிதி மகன் இன்பநிதி பொது இடத்தில் பெண் ஒருவரை முத்தமிட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி குறித்து சமீபகாலங்களில் ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வருவதை காண முடிகின்றது.
சமீபத்தில் கூட பெண் ஒருவருடன் அவர் இருப்பதாக கூறி புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலானது. இப்புகைப்படங்கள் பொய்யானவை என்று திமுக ஆதரவாளர்கள் சிலர் கூறியிருந்தாலும், சம்மந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்த வித நேரடி விளக்கங்கள் தரப்படவில்லை.
இந்நிலையில் தற்போது உதயநிதியும் அவரது நண்பரும் பெண் ஒருவரை பொது இடத்தில் வைத்து முத்தமிட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதா?
இன்பநிதி பொது இடத்தில் பெண் ஒருவரை முத்தமிட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்க்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் படத்தை உற்று நோக்கியதில் வைரலாகும் படத்திருப்பவரின் முகத்தோற்றம் இன்பநிதி முகத்தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து வைரலாகும் புகைப்படம் குறித்த உண்மையை அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். அதில் @bazilkhann எனும் டிவிட்டர் கணக்கில் ஜுலை 13, 2019 ஆம் ஆண்டு “My best friend and I love the same girl, we don’t fight, we come to an agreement because that’s what friendship is all about” என்று தலைப்பிட்டு இப்புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இந்த டிவீட்டானது கராச்சியிலிருந்து (பாகிஸ்தான்) பதிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இணைய ஊடகங்கள் சிலவற்றில் இது செய்தியாக வெளியிடப்பட்டிருப்பட்டுள்ளது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்ந்து தேடியதில், சாக்ஷி மிஷ்ராவின் சகோதரர் பொது இடத்தில் முத்தமிட்டதாக கூறி இதே புகைப்படங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவியுள்ளதையும் அதை மறுத்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
சாக்ஷி மிஷ்ரா உத்திரப் பிரதேச எம்எல்ஏ ராஜேஷ் மித்ராவின் மகளாவார். இவர் தலித் ஒருவரை குடும்பத்தை எதிர்த்து மணந்துக் கொண்டார். இதனையடுத்து தன் குடும்பத்தாரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வீடியோ வெளியிட்டார்.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் @bazilkhann டிவிட்டர் கணக்குக்கு சொந்தமானவரை தொடர்புக் கொண்டு வைரலாகும் புகைப்படம் குறித்து விசாரித்ததாகவும், அதற்கு அவர் அப்படங்களை இணையத்தில் எடுத்ததாகவும், அப்படத்தில் இருப்பவர்கள் யாரென்று தனக்கு தெரியாது என்று அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் தெளிவாகுவது என்னவென்றால்,
அதேபோல் அப்படத்திலிருப்பவர்கள் யார், அவர்களுக்குள் என்ன உறவு என்பது குறித்து எந்த ஒரு தகவலும் நம்மால் அறிய முடியவில்லை.
Also Read: சூரியனின் ஒரு பகுதி உடைந்ததை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததா? உண்மை என்ன?
உதயநிதி மகன் இன்பநிதி பொது இடத்தில் பெண் ஒருவரை முத்தமிட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from India Today, Dated 22 July, 2019
Tweet from @bazilkhann, Dated 13 July, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 29, 2021
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024