Claim: ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றார் இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட்.
Fact: இத்தகவல் தவறானது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
“இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும்.
இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள். ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறியதாக அவரது புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

