சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகுஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெரு முனை பிரச்சாரம்

Fact: வைரலாகும் வீடியோ கேரளா கோழிக்கோட்டில் எடுக்கப்பட்டதாகும்.

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”குஜராத்தில் ராகுல் காந்தியின் தெரு முனை பிரச்சாரம்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @Hereprak

Archived Link

Screenshot from X @Sankar48246858

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது அல்ல; கேரளாவின் கோழிக்கோட்டில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

கோழிக்கோடு மாவட்டம், வடகரா மக்களவைத் தொகுதியில் கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று மாலை UDF வேட்பாளரும், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினருமான Shafi Prambil தனது பிரச்சாரத்தை துவங்கியபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கேரள காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும், பல்வேறு செய்தி ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவே குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரப்பப்படுகிறது.

Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

Conclusion

குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, INCKerala, Dated March 10, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular