Fact Check
பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?
Claim
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
Fact
இத்தகவல் தவறானதாகும். பாஜக தரப்பும் தமிழ் ஜன ஊடகத் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாட்டுக் கோமியத்தை “அமிர்த நீர்” என்று கடந்த ஜூன் மாதத்தில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் “தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அமிர்த நீரான கோமியம் வழங்குவோம்!” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
Fact Check/Verification
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத்தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம்.
அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டில் தமிழ் ஜனம் இணைய ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டு வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம்.
அத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தமிழ் ஜனம் வெளியிட்டதற்கான தரவுகள் கிடைக்கவில்லை.
ஆகவே தமிழ் ஜனம் ஊடகத்தின் டிஜிட்டல் பொறுப்பாளர் சந்தானத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் “வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது, அந்த கார்டை தமிழ் ஜனம் ஊடகம் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.
Also Read: நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with M.S.Balaji, State President, Social Media Cell, BJP, Tamil Nadu
Phone Conversation with Santhanan, Tamil Janam Tv