Fact Check
நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
வீழ்வது அவமானமல்ல..வீழ்ந்து கிடப்பதே அவமானம்… Be careful rajinikanth sir
Fact
வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் கன்னட எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ராஜாராம் தள்ளூர் ஆவார்.
நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”வீழ்வது அவமானமல்ல..வீழ்ந்து கிடப்பதே அவமானம்… Becareful
@rajinikanth sir” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, ஜூலை 24ஆம் தேதியன்று பிரபல கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ராஜாராம் தள்ளூர் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது.

மேலும், அதில் அன்றைய நாளிதழ்களை வீட்டு வாயிலில் எடுக்கச் சென்றபோது அவர் தவறி விழுந்த நிகழ்வை நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். என்னுடைய வீட்டு பாதுகாப்பு கேமராவில் இந்த காட்சி பதிவானது என்றும் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, அவர் நகைச்சுவையாக பதிவிட்டிருந்த வீடியோவை சில ஊடகங்கள் நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக செய்தியாக வெளியிட்டிருப்பதையும் இன்று பதிவிட்டு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவே நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Also Read: நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
Conclusion
நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By, Rajaram Tallur, Dated July 24, 2025
Facebook Post By, Rajaram Tallur, Dated July 30, 2025