ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் எடிட் வீடியோ!

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் எடிட் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் முழக்கம்

Fact: வைரலாகும் வீடியோவில் புஷ்பா ஸ்டைல் செய்யக் கோரும் கோஷம் ஜெய்ஸ்ரீராம் என்று எடிட் செய்யப்பட்டுள்ளது.

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இப்படி கழுதை மாதிரி கத்துனதால தான்….வாய்லயே மிதிச்சு கூப்புல உட்கார வச்சிட்டு போனானுக” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @Stalinkumari

Archived Link

Screenshot from X @KovaiHarish

Archived Link

Screenshot from X @jeraldDraja

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!

Fact Check/Verification

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதும், மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் அதில் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

குறிப்பிட்ட வைரல் வீடியோவின் மற்றொரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி வீடியோ கடந்த அக்டோபர் 28, 2023 அன்று Dharvikyadav என்கிற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் புஷ்பா, புஷ்பா என்று அல்லு அர்ஜூன் பட ஸ்டைலை கேட்டு ரசிகர்கள் கோஷமிடுவது நன்கு பதிவாகியுள்ளது.

வார்னர் பலமுறை புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் செய்வது போன்று செய்ததைத் தொடர்ந்தே இந்த கோஷத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர் என்று தெளிவாகத் தெரிகிறது. வைரல் வீடியோவில் எடிட் செய்யப்பட்டுள்ள ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பான ஆடியோ நமக்குக் கிடைக்கவில்லை. அதனையும் விரைவில் இணைக்கிறோம்.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரரான ரிஸ்வானைப் பார்த்து ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Conclusion

டேவிட் வார்னரிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலககோப்பை இறுதிப் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Media

Our Sources:
YouTube Video From, Dharvik Yadav, Dated October 28, 2023
Insta post from, ICC, Dated October 03, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular