ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 27, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 27, 2024

HomeFact Checkஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஆஸ்திரேலியாவில் உள்ள ஓபரா ஹவுஸ் அதன் மேற்பகுதியை மட்டும் தான் நாம் பார்த்திருப்போம் அதனுடைய அடிப்பகுதி முதல் முறையாக உங்கள் பார்வைக்கு

Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.

ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஆஸ்திரேலியாவில் உள்ள ஓபரா ஹவுஸ் அதன் மேற்பகுதியை மட்டும் தான் நாம் பார்த்திருப்போம் அதனுடைய அடிப்பகுதி முதல் முறையாக உங்கள் பார்வைக்கு” என்று இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Facebook/balamurugan.rajendran.771

Facebook Link/Archived Link

Screenshot from X @vinothkamal2

X Link/Archived Link

Screenshot from X @bsenthilkumar05

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?

Fact Check/Verification

 ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Synthography Art என்கிற டிஜிட்டல் வரைகலை சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இது மட்டுமின்றி சுதந்திர தேவி சிலை, எகிப்து பிரமிடு உள்ளிட்ட வேறு சில முக்கிய இடங்களையும் இதே போன்று AI மூலமாக inside என்கிற பதிவுடன் உருவாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட புகைப்படமே, உண்மையிலேயே ஓபரா ஹவுஸின் அடிப்பாகத்தோற்றம் என்பதாக வைரலாகிறது என்பது நமக்கு உறுதியாகியது. சிட்னி ஓபரா ஹவுஸ் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த வீடியோவையும் இங்கே இணைத்துள்ளோம்.

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Conclusion

ஆஸ்திரேலியா ஓபரா ஹவுஸின் அடிப்பகுதி என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Synthography Art, Dated October 06, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular