சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkபாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறினாரா?

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை  என்று புதிய தலைமுறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய் கிழமை (ஜூலை 23) பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் நிதிகளை வழங்கிவிட்டு, மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், “இது எங்க டீலிங் பட்ஜெட்! நாங்கள் ஆட்சியமைக்க உதவியவர்களுக்காக நிதி ஒதுக்குவதில் என்ன தவறு? இதெல்லாம் பதிலுக்கு பதில் உதவும் பழக்கம்தான்” என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ்கார்டும், பாஜகவின் ஆட்சியை தக்கவைக்கவே ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மட்டும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இது NDA கூட்டணிக்கான பட்ஜெட்” என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக மற்றொரு நியூஸ்கார்டும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள்

Facebook Link | Archive Link

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள்

Facebook Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Fact Check/Verification

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்டுகள் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் நிர்மலா சீதாராமன் இரு மாநிலங்களுக்கு மட்டும் நன்மை செய்து மற்ற மாநிலங்களுக்கு புறக்கணிக்கப்பட்டதாக பரப்பப்படும் விமர்சனத்திற்கு பதிலளித்ததோடு, அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய வீடியோ சன்சத் டிவி யூடியூப் பக்கத்தத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது (08:25 நிமிடத்தில்).

இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டுகளில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தவறானது என்பது உறுதியாகின்றது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டுகள் புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என புதிய தலைமுறையின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டுகளை புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக அந்த நியூஸ்கார்டுகள் போலியானது என்று புதிய தலைமுறையின் இணையத்தளத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள்
பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள்

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டுகள் குறித்து விசாரித்தோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானது என்று உறுதி செய்தார்.

Also Read: கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Sansad TV, Dated July 24, 2024
Report from Puthiya Thalaimurai
Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular