நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்று சீமான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் பற்றிய உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை ஊடகம் வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கல; சந்திச்சிருந்தா தைரியமா ‘இதுக்காகத்தான் சந்திச்சேன்’னு சொல்லுவேன். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சீமான் மறுப்பு” என்று நியூஸ்கார்ட் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடிட் செய்தே பரவி வரும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.


தொடர்ந்து, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்பதை உறுதி செய்தார்.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Conclusion
நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்று சீமான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By, Puthiyathalaimurai, Dated April 06, 2025
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated April 09, 2025