மியா காலிஃபா புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.vn/pR4yP
Fact Check/Verification
புதிய வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யக் கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இப்போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது.
உலக அளவில் பல நாடுகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த் சூழலியல் ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க், பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா காலிஃபா முதலானோர் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் டிவீட் செய்திருந்தனர்.
இதனால் இவர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதால் நடிகை மியா காலிஃபா புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேக் ஊட்டி கொண்டாடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/GfVFz
Archive Link: https://archive.vn/qrLer
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
மியா காலிஃபா படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டி கொண்டாடியதாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இதில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ராகுல் காந்தியின் 37 ஆம் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் சோனியா காந்தி இல்லத்தின் முன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்டப் புகைப்படத்தை எடிட் செய்தே காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டியதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பி வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion
மியா காலிஃபா புகைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கேக் ஊட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டப் புகைப்படம் என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/kkmadurai9/status/1358430476474585095
Twitter Profile: https://twitter.com/sparjaga/status/1358335511606120449
Facebook Profile: https://www.facebook.com/jagadeesan.ulaganathan.1/posts/1304983549901757
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)