சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா?

ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாப் பாடகி ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ரிஹானா குறித்து பரவும் பதிவு
Source: Twitter

Archive Link: https://archive.vn/uYFXK

Fact Check/Verification

புதிய வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யக் கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இப்போராட்டம் உலக அளவில் பலரின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது.

உலக அளவில் பல நாடுகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஸ்வீடனைச் சேர்ந்த் சூழலியல் ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க், பாப் பாடகி ரிஹானா முதலானோர் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் ட்வீட் செய்திருந்தனர்.

இந்த சம்பவம் இந்திய அரசியல் உலகில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சச்சின் தெண்டுல்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரலங்கள் இவர்களின் ட்வீட்டை எதிர்த்து  தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்,

இதைத் தொடர்ந்து கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் அது தவறானத் தகவல் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில்  ஆய்வு செய்து தெளிவுப்படுத்திருந்தோம்.

தற்போது ரிஹானா ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறி, பாகிஸ்தான் கொடியுடன் ரிஹானா போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதைப் பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.vn/oRbHd

Archive Link: https://twitter.com/Deppaa2/status/1357255018391326722

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

ரிஹானா ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

இவ்வாறு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆதரவாக ரிஹானா கலந்துக் கொண்டார். இதுக்குறித்த செய்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வந்திருந்தது.

ரிஹானா குறித்து வந்த செய்தி
Source: The Indian Express

இந்நிகழ்வில் மேற்கிந்திய தீவுகள் கொடியுடன் ரிஹானா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து அவர் பாகிஸ்தான் கொடியுடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பி வருகின்றனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

பாப் பாடகி ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Imposter Content

Our Sources

Twitter Profile: https://twitter.com/MANIKAN24314712/status/1357222846406172672

Twiitter Profile: https://twitter.com/kaavi__tamilan/status/1357570192142786560

Greta Thunberg: https://twitter.com/GretaThunberg/status/1357054451769606147

Rihanna: https://twitter.com/rihanna/status/1356625889602199552

The Indian Express: https://indianexpress.com/photos/entertainment-gallery/rihanna-adds-glitz-and-glamour-to-world-cup-2019-5810112/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular