திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkகே.டி.ராகவன் சமையல் எரிவாயு விலையேற்றத்தை சைவ உணவுப் பழக்க மாற்றத்திற்கான வாய்ப்பு என்று கூறினாரா?

கே.டி.ராகவன் சமையல் எரிவாயு விலையேற்றத்தை சைவ உணவுப் பழக்க மாற்றத்திற்கான வாய்ப்பு என்று கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சமையல் எரிவாயு உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கே.டி.ராகவன் குறித்து வைரலாகும் பதிவு
Source: Facebook

Fact Check/Verification

எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்யணம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் இரண்டாவது முறையாக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று 14.5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, இன்றைய தினத்தில் எரிவாயு சிலிண்டர்  சென்னையில் 785 ரூபாய்க்கும், டெல்லியில் 769 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு மீது தங்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்த  #ModiFuelScam எனும் ஹேஷ்டேகை உருவாக்கி, அதன்கீழ் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், “மாமிசத்தை விட காய்கறிகள் வேக குறைந்த நேரத்தையும் எரிபொருளையும் எடுத்துக் கொள்வதால் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்.” என்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் அவர்கள் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

https://www.facebook.com/thanu.pillai.940/posts/1624987861018335

Archive Link: https://archive.vn/5BxCb

https://www.facebook.com/andy.n.robert/posts/4323380847688884

Archive Link: https://archive.vn/mAQRD

https://www.facebook.com/Elangkavig/posts/2923930011216494

Archive Link: https://archive.vn/Z5vum

சமூக வலைத்தளங்களில் பலர் இப்புகைப்படச் செய்தியைப் பகிர்ந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கே.டி.ராகவன் குறித்து பரப்பப்படும் பதிவு
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமையல் எரிவாயு உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று கே.டி.ராகவன் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து  அறிய இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.

நமது ஆய்வில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் பொய்யானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

கே.டி.ராகவன் அவர்கள் தனது அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இப்புகைப்படச் செய்தி தவறானது என்று  மறுப்புத்  தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=2471760599799026&id=100008953295661

 Conclusion

சமையல் எரிவாயு உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/thanu.pillai.940/posts/1624987861018335

Facebook Profile: https://www.facebook.com/andy.n.robert/posts/4323380847688884

K.T.Ragavan: https://www.facebook.com/permalink.php?story_fbid=2471760599799026&id=100008953295661

Facebook Profile: https://www.facebook.com/Elangkavig/posts/2923930011216494


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular