Monday, April 14, 2025
தமிழ்

Fact Check

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கின்றதா?

banner_image

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல்

மக்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாலேயே இந்த விலையேற்றம் ஏற்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல் - 1

Twitter Link | Archive Link

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல் - 2

Facebook Link

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது கடந்த 2017 ஆம் ஆண்டே ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வந்து விட்டது.  மத்திய மறைமுக வரிகள் ஆணையத்தின் (the Central Board of Indirect Taxes and Customs (CBIC)) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி பார்க்கையில் சமையல் எரிவாயுவுக்கு மொத்தம் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.

அதாவது மாநில அரசு 2.5 சதவீதம் வரியும்,  மத்திய அரசு 2.5 சதவீதம் வரியும் வசூலிக்கின்றது.

LPG taxes on the CBITC
Screenshot of LPG taxes on the CBITC website

இதை தவிர்த்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுக்கு  5 சதவீதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டருக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகின்றது. இதில் மாநில அரசுக்கு 2.5 சதவீதம் மட்டுமே வரி செலுத்தப்படுகின்றது என்பது தெளிவாகின்றது. ஆகவே எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி வசூலிப்பதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

இந்த தகவலானது கடந்த வருடமே சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்த கட்டுரை நியூஸ்செக்கர் ஆங்கிலப் பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதை படிக்க: State Government’s Do Not Levy 55% Tax on LPG Cylinders, Viral Message Is False

Conclusion

எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Source
Article on Daily Thanthi
Central Board of Indirect Taxes and Customs
Government of India circular


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,713

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.