Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கூட்டணிக் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மிகவும் பரப்பாக செயல்படத் தொடங்கி விட்டன.
ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக, அதிமுக என இவ்விரண்டு கட்சிகளைத் தவிர்த்து, வேறு எந்த ஒரு கட்சியும் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லை. இதற்கு இவ்விருக் கட்சியிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை முக்கியக் காரணமாக கூற முடியும்.
திமுக என்றால் முதலில் அண்ணா, அவருக்குப்பின் மு.கருணாநதி அவர்கள் அக்கட்சியின் முகமாக இருந்தார். அதேபோல் அதிமுக என்றால் முதலில் எம்.ஜி.ஆர் அவர்களும் அவருக்குப்பின் ஜெயலலிதா அவர்களும் அக்கட்சியின் முகமாக இருந்து வந்தனர்.
ஆனால் ஜெயலலிதா, மு.கருணாநிதி என இரு பெரும் தலைவர்களின் மறைவிற்குப்பின், இவ்விரு திராவிடக் கட்சிகளிலும் கூறிக் கொள்ளும்படியான முகமதிப்புடைய தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.
ஆகவே இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற பாஜக மிகவும் பரப்பரப்பாக செயல்பட்டு வருகிறது.
இதே போன்று தமிழகத்தின் இரு பெரும் உச்ச நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களும், கமல்ஹாசன் அவர்களும் அரசியல் களத்தில் புதிதாக களம் இறங்கியுள்ளனர். ரஜினிகாந்த் அவர்கள் இம்மாதம் 31 ஆம் தேதி தனது கட்சிப் பெயர் குறித்து தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்து முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காக காத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் திமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்ததாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கமல்ஹாசன் கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டப்பின், நெட்டிசன்கள் இச்செய்திக் குறித்த தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கினர்.
ஆனால் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டதுபோல் உண்மையிலேயே கமல்ஹாசன் அவர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் இவ்வாறு ஒரு பேச்சுவார்த்தை நடத்தினாரா என்பதை அறிய, இச்செய்தி குறித்து ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் இச்செய்தியானது முற்றிலும் தவறானது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது. கமல்ஹாசன் அவர்கள் தூத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கமல்ஹாசன் அவர்கள் கூட்டணிக் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாக நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டச் செய்தியானது முற்றிலும் ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News 18 Tamilnadu: https://twitter.com/News18TamilNadu/status/1339118736905625602
Twitter Profile: https://twitter.com/Praveenoffici19/status/1339149223451758592
Twitter Profile: https://twitter.com/sangiselvaa1/status/1339131099738337286
Nermaiyin Kural
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025
Ramkumar Kaliamurthy
October 25, 2025