Thursday, March 13, 2025
தமிழ்

Fact Check

கர்நாடக எஸ்.பி. கோயில் கருவறையில் இயேசுப் படத்தை வைக்க வற்புறுத்தினாரா?

banner_image

கர்நாடக மாநிலம் சாமராஜ நகரா மாவட்டத்தில் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர், கொள்ளிகாலா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கருவறையில் மாதா மற்றும் இயேசு கிறிஸ்து உள்ள புகைப்படத்தை வைக்க  வற்புறுத்தியதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கர்நாடக எஸ்.பி குறித்து பரவும் செய்தி
வைரலாகும் செய்தி.

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு  கர்நாடக  மாநில சாமராஜ நகரா மாவட்டத்தின் கொள்ளிகாலா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அப்பகுதியைச் சார்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூஜை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

 பூஜைக்குப் பின் அங்கு வந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் திவ்யா சாரா தாமஸ் அவர்கள் இயேசு மற்றும் மாதா மேரி உள்ளப் புகைப்படத்தை கோயில் கருவறையில் வைத்து பூஜை செய்யக் கட்டாயப்படுத்தியதாகப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய  நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

உண்மையில்  காவல்துறைக் கண்காணிப்பாளர் திவ்யா சாரா தாமஸ்  அவர்கள், கோயில் அர்ச்சகரைக் கட்டாயப்படுத்தியதாக பரவியப் பதிவானது முற்றிலும் பொய்யான ஒன்றாகும்.

இச்சம்பவம் குறித்து பரவும் புகைப்படங்களை நாம் ஆராயும்போது, ஒரு பதட்டகரமான சூழலில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களாக அவை தோன்றவில்லை. சம்பவ இடத்தில் அனைத்தும் சாதரணமாக இருப்பதை நம்மால் காண முடிகிறது.

கர்நாடக எஸ்.பி குறித்து பரவும் புகைப்படம்
கர்நாடக எஸ்.பி. தரிசனம் செய்யும் காட்சி.

மேலும் இச்சம்பவம் இக்கோயில் அர்ச்சகர் கூறியதாவது,

“எங்கள் கோயிலுக்கு அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் வருவர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி  அயோத்தியில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதை முன்னிட்டு எங்கள் ஆலயத்தில் சிறப்புப் பூஜை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதே சமயம், இந்த தினத்தில் சாரா அவர்கள் வெள்ளப் பாதுகாப்பு பணிகளுக்காக எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். ஆகவே அவரை இப்பூஜைக்கு விருந்தினராக அழைத்தோம்.

எங்கள் கோயிலுக்கு யார் வருகைத் தந்தாலும் அவருக்கு கடவுள் படத்தைப் பூஜை செய்து பரிசளிப்பது வழக்கம். சாரா அவர்கள் கிறித்தவர் என்பதால் அவர்க்கு இயேசு மற்றும் மேரி மாதா இருக்கும் புகைப்படத்தை பூஜை செய்து அளித்தோம்.

ஆனால் சாரா தாமஸ் அவர்கள் கட்டாயப்படுத்தியதால்தான் இதை நாங்கள் செய்தோம் என்றுச் செய்தி பரவுகிறது. இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

எங்களின் இச்செயல் இந்து மக்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் எங்களை மன்னிக்கவும்.”

என்று அவர் கூறி இருந்தார்.

https://factcheck.ksp.gov.in/wp-content/uploads/2020/08/MALICIOUS-Charmarajanar-SP-Had-Put-Pressure-on-Temple-Priest-to-Place-Photo-of-Jesus.mp4

இதுக்குறித்து கர்நாடக மாநிலக் காவல்துறையினரும்  தங்கள் மறுப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரில், ஒரு ஃபேஸ்புக் பதிவால் மிகப்பெரிய மதக் கலவரம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியது. இந்நிலையில் இதுப்போன்ற தவறானப் பதிவைப் பரப்புவது கண்டிக்கத்தக்க விஷயமாகும்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் சாமராஜ நகரா காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஞ்சநேயர் கோயில் கருவறையில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை வைக்க வற்புறுத்தியதாகப் பரவியச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகிறது.

Result: False


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/noconversiontamilnadu/photos/a.1262072410565426/2895236557248995

Twitter Profile: https://twitter.com/azad_nishant/status/1293381171770990594

Twitter Profile: https://twitter.com/NikhilShankarJ1/status/1293898935551942657

Karnataka Police: https://factcheck.ksp.gov.in/chamarajanagar-sps-temple-visit-facts/

Priest Video: https://factcheck.ksp.gov.in/wp-content/uploads/2020/08/MALICIOUS-Charmarajanar-SP-Had-Put-Pressure-on-Temple-Priest-to-Place-Photo-of-Jesus.mp4


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.