Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ரஜினிகாந்த் அவர்களை நடிகை கஸ்தூரி அவர்கள் கிண்டலடித்ததாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? எனும் இக்கேள்வி கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இக்கேள்விக்கு ஒருவாறாக தற்போது பதில் கிடைத்து விட்டது.
ரஜினிகாந்த் அவர்கள் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மூலம் நேற்று (29/12/2020) அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் சொந்தக் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன்பின் கடந்த மாதம் தனது கட்சிப் பெயர் குறித்தும் கட்சி தொடங்கும் தேதி குறித்தும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஞாயிறு அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள், நேற்று “தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளார்
இந்தக் கொரானாக் காலத்தில் களப்பணி செய்வதற்கு தனது உடல்நிலை ஒத்து வராது என்றும், அவ்வாறு மீறி ஏதேனும் செய்து, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்னை நம்பி வருபவர்களை நடுத்தெருவில் விட்டதுபோல் ஆகிவிடும். ஆகவே அதை நான் செய்ய விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிக்கைக்கைத் தொடர்பாக அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி அவர்கள் ரஜினிகாந்த் அவர்களின் இந்த முடிவு குறித்து கிண்டலடித்ததாக தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
தினமலர் வெளியிட்ட இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தினமலர் செய்தி வெளியிட்டதுபோல் கஸ்தூரி அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை கிண்டலடித்தாரா என்பதை அறிய இச்செய்திக் குறித்து ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில், கஸ்தூரி அவர்கள் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களின் முடிவு குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
கஸ்தூரி அவர்கள்,
“எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே.
இப்ப இல்லை, எப்பவுமே இல்லை !
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.”
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்த பதிவில் கஸ்தூரி அவர்கள் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு வார்த்தையையும் கிண்டலடிக்கும் தொனியில் பயன்படுத்தவே இல்லை. உண்மையில் இப்பதிவின் தொனியானது, ஒரு விமர்சனத் தொனியாகவே உள்ளது.
கஸ்தூரி அவர்களும் தினமலர் வெளியிட்ட இந்த தவறானச் செய்திக்கு கண்டிப்பு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களை கஸ்தூரி அவர்கள் கிண்டலடித்ததாக தினமலர் வெளியிட்ட செய்தியானது தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Dinamalar: https://twitter.com/dinamalarweb/status/1343921768961105921
Rajinikanth: https://twitter.com/rajinikanth/status/1343803830429863937
Kasthuri Shankar: https://twitter.com/KasthuriShankar/status/1344010971946217472,
https://twitter.com/KasthuriShankar/status/1343820338501541888
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 17, 2024
Vijayalakshmi Balasubramaniyan
October 11, 2024
Ramkumar Kaliamurthy
July 8, 2024