Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளதால் புதுவையின் துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றப்பட்டுள்ளதாக செய்திப் பரவி வருகிறது.
புதுவையின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் கடந்த 4 வருடங்களாக உள்ளார். இப்போது அவரை அப்பதவியிலிருந்து விலக்கி, அவருக்குப் பதிலாக பாஜகவின் மூத்தத் தலைவர் இல.கணேசன் அவர்கள் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
இல.கணேசன் அவர்கள் இதற்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்.
கிரண்பேடி அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தரவிருப்பதாலேயே அவர் புதுவையின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.
இச்செய்தியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுக்குறித்து நாம் நியூஸ்செக்கர் சார்பில் விசாரித்தபோது இதன் உண்மைகள் தெரிய வந்தது.
உண்மையில், கிரண் பேடி அவர்கள் மாற்றம் தொடர்பாக வந்தச் செய்தியானது முற்றிலும் தவறானச் செய்தியாகும். இச்செய்தியை கிரண் பேடி அவர்கள் முற்றிலும் மறுத்துள்ளார்.
கிரண்பேடி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இச்செய்திக் குறித்த மறுப்பைப் பதிவு செய்துள்ளார்.
இல.கணேசன் அவர்கள் தரப்பில் இதுக்குறித்துக் கேட்டதற்கு, தொடர்ந்து வாழ்த்துகள் வருகிறது. ஆனால் இதுக்குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அவ்வாறு வந்தால் தெரியப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து நியூஸ்18 தமிழிலும் செய்தி வந்துள்ளது.
கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து அவருக்கும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
ஆளுநர் குறித்தும் ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சிக் குறித்து ஆளுநரும் குறைகள் கூறுவதும் பழி சொல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்போது பரவிய இச்செய்தி புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது விரிவான விசாரணைக்குப்பின் புதுவைத் துணை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி அவர்கள் மாற்றம் என்று வந்தச் செய்தியானது முற்றிலும் பொய்யானது என்று நமக்குத் தெளிவாகிறது.
Twitter Profile: https://twitter.com/vkdevang/status/1287398422383796226
Twitter Profile: https://twitter.com/TirupatiBjp/status/1287414629702832130
Twitter Profile: https://twitter.com/Krishanu_Singh/status/1287329671063826433
Twitter Profile: https://twitter.com/thekiranbedi/status/1287412262857187328
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
December 22, 2023
Vijayalakshmi Balasubramaniyan
February 18, 2021
Ramkumar Kaliamurthy
August 13, 2020