ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழ்நாட்டில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

தமிழ்நாட்டில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அந்த குழந்தையின் சாதுர்யத்தால் உயிர் பிழைத்துக் கொண்டது..
திராவிட மாடல் ஆட்சியில் என்ன கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ.

Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் வீடியோ புதுச்சேரியில் எடுக்கப்பட்டதாகும்.

தமிழ்நாட்டில் சிறுவன் ஒருவன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”அந்த குழந்தையின் சாதுர்யத்தால் உயிர் பிழைத்துக் கொண்டது. திராவிட மாடல் ஆட்சியில் என்ன கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @InfantPaul_Leon

Archived Link

Screenshot from X @inganamjagadish

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

தமிழ்நாட்டில் சிறுவன் ஒருவன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்ததாகப் பரவும் வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ காட்சியை வெளியிட்ட பாலிமர் செய்தியே அதனைத் தெளிவாக புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவம் என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்த முழுமையான செய்தியை ஆராய்ந்தபோது தினமலர் உள்ளிட்ட ஊடகங்களில் இதுகுறித்த முழுமையான செய்தி வெளியாகியிருந்தது.

அதில், புதுச்சேரி பாரதி வீதியில் நடந்து சென்றபோது பாதாளசாக்கடையில் விழுந்த சிறுவனை சமயோஜிதமாக காப்பாற்றிய தாய் என்று இந்த நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியிருப்பதை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழ்நாட்டில் சிறுவன் ஒருவன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்ததாகப் பரவும் வீடியோ காட்சி புதுச்சேரியில் நடைபெற்றது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post From, Polimer News, Dated December 20, 2023
Report From, Dinamalar, Dated December 21, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular