Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழக முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அவர்களை சந்திக்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்றார்.
இச்சந்திப்பின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை, இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று துணை முதல்வர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
ஆனால் முன் அனுமதி இல்லாததால் தமிழக துணை முதல்வரை சந்திக்கவில்லை என்றும், மைத்ரேயன் அவர்களை மட்டுமே சந்தித்ததாகவும் நிர்மலா சீதாராமன் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
நிர்மலா சீதாராமன் தமிழக துணை முதல்வரை அவமானப்படுத்திவிட்டார் என்று கூறி இச்சம்பவமானது அச்சமயம் அரசியல் உலகில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது நிர்மலா சீதாராமன் அவர்களை சந்திக்க தமிழக முதல்வர் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும், பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் செல்வதால் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தீவிரமாக ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தை நம்மால் காண முடிந்தது.
அப்பதிவில்,
“மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நிதி அமைச்சரை சந்திக்க கால அவகாசம் கேட்டு எந்த கோரிக்கையும் இந்த அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. தவறான செய்தி.”
என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதன்படி பார்க்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது உறுதியாகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/niranjan2428/status/1351459617755131907
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1688250661354782&id=100005095925928
Nirmala Seetharan Office: https://twitter.com/nsitharamanoffc/status/1351566274678063107
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 21, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2025
Ramkumar Kaliamurthy
March 27, 2025