Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை முதுகு வளைய தலைக் கவிழ்ந்து வணங்கியதுப் போல புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பலக் கால மாக பரவி வருகிறது.
தமிழக துணை முதல்வரும் இந்தியப் பிரதமரும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது துணை முதல்வர் பிரதமரை முதுகு வளைய குனிந்து வணங்கியதாக ஒரு புகைப்படம் சமூகத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இப்புகைப்படம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது.
தமிழகத்தின் முன்னணி வார இதழான ‘ஜூனியர் விகடன்’ ஒரு பிரதியில் இப்படத்தை அட்டைப் படமாகவே பயன்படுத்தி இருந்தது.
கலைஞர்செய்திகள் உள்ளிட்ட இணையத் தளங்களில் இப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.
வைரலாகியப் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தபோது, நமக்குப் பலத் தகவல்கள் கிடைத்தது.
மத்திய அரசின் செய்தித் தகவல் மையமான, PIB(Press Information Bureau)-யின் அதிகாரப் பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் இவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்திருந்தது.
இதில் வைரலான புகைப்படத்தில் காணப்படும் அதே பின்புலத்தில் இருவரும் இருக்கைகளில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் நம்மால் காண முடிந்தது.
ஆனால் வைரலானப் புகைப்படத்தில் ஓ. பன்னீர் செல்வம் உட்கார்ந்திருக்கும் இருக்கைக் காணப்படவில்லை.
இது ஒருவேளை ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருக்காலோமோ, என்ற சந்தேகத்தின் அடிப்படையில் “O.Panneerselavam bow” எனும் கீவேர்டைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அப்போது, நியூஸ்இன் ஏசியா எனும் இணையத் தளத்தில்,“The present Tamil Nadu Chief Minister O.Panneerselvam bowing deeply to Jayalaliathaa” எனும் தலைப்பில் செய்தி ஒன்றைக் காண முடிந்தது.
அச்செய்தியில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் வளைந்தபடி வணக்கம் செலுத்தும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.
பொதுவாகவே, ஜெயலலிதா அவர்களின் முன் அவரின் கட்சியைச் சார்ந்தவர்கள் மண்டியிட்டு வணங்குவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகும்.
அவ்வாறு பன்னீர்செல்வம் அவர்கள் வணங்கியபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, பிரதமரை வணங்கியதுபோல் ஒரு புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படங்களையும், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
நம் விரிவான விசாரணைக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமரை மிகவும் வளைந்து கும்பிட்டதாகப் பரவும் புகைப்படமானது பொய் என்று தெளிவாகியுள்ளது.
PIB: https://twitter.com/PIB_India/status/810819577307348993
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 24, 2024
Ramkumar Kaliamurthy
May 19, 2023
Ramkumar Kaliamurthy
December 28, 2022