Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாடகி சுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடியதாகச் செய்தி ஒன்று ஊடகங்களில் வந்துள்ளது.
ரேடியோ ஜாக்கி, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் சுசித்ரா. சீராகச் சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையை மொத்தமாகத் புரட்டிப் போட்டது சுச்சி லீக்ஸ்.
இந்த நிகழ்வானது அவரது சொந்த வாழ்வையும் பொது வாழ்வையும் பெரிதாக பாதித்தது. இதன்பின் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பொது வெளியில் வருவதை இவர் தவிர்த்திருந்தார்.
தற்போது மீண்டும் இவரின் முகம் ஊடகங்களில் தெரிய ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது பொது விஷயங்களுக்காக தன் குரலை உயர்த்தி வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, சாத்தான் குளம் படுகொலைக் குறித்து வீடியோ ஒன்றை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா அவர்கள் கலந்துக்கொள்ளவிருப்பதாகவும், இதற்காக இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி ஒன்று உலவி வந்தது.
இந்நிலையில் சுசித்ரா அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டல் அறையிலிருந்து பயந்து, அலறியடித்து ஓடி வந்ததாகவும் தொலைக்காட்சி நிறுவனத்தார் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் ஓட்டல் அறைக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இசெசெய்தியை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சுசித்ரா குறித்துப் பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்துத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், சுசித்ரா அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தியை முழுமையாக மறுத்திருந்ததைக் காண முடிந்தது.
சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தமிழில் மொழிப்பெயர்த்தால்,
என்பதே அர்த்தமாக வரும்.
மேற்கூறியக் கூற்றுப்படிப் பார்த்தால் ஊடகங்களில் சுசித்ராக் குறித்து வந்தச் செய்தியானது தவறான ஒன்று என்பது தெளிவாகிறது.
பாடகி சுசித்ரா குறித்து ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NewsJ: https://twitter.com/NewsJTamil/status/1322044713956900864
Dhinathanthi: https://twitter.com/dinathanthi/status/1322100325768077312
Malaimalar: https://twitter.com/maalaimalar/status/1321839866632572933
Ms. Suchitra: https://www.instagram.com/p/CG6qUS1jfESUiWuNTUurHVgijUjuVIoRJmfU900/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல்முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)