Fact Check
காதலர் தினத்தன்று லாக்டவுன் அறிவித்தாரா முதல்வர்?
பிப்ரவரி 14, காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கிள் பசங்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் லாக்டவுன் அறிவித்ததாகப் பரவும் வீடியோ செய்தி உண்மையில்லை.
பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, காதலர்களுக்கான தினமாக ‘வாலண்டைன்ஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், காதல் துணை இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று காதலர் தினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லாக்டவுன் அறிவித்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fact Check/Verification
ரோமானியப் பாதிரியார் வாலண்டைன் மற்றும் அஸ்டோரியஸ் ஆகியோரின் காதலின் நினைவாகவும், வாலண்டைனின் நினைவு நாள் என்பதாலும் பிப்ரவரி 14, உலக காதலர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பூக்கள், வாழ்த்து அட்டைகள் என்று அன்பை பரிமாறிக் கொள்ளும் காதலர்களால் இன்றைய தினம் மிகவும் உற்சாகமாகக் காணப்படும்.
இந்நிலையில், முரட்டு சிங்கிள்கள் என்று தங்களைத் தாங்களே செல்லமாக
அழைத்துக் கொள்ளும் காதலிக்க ஆளில்லாத சில இளைஞர்கள் காதலர் தினத்தன்று முதல்வரிடம் லாக்டவுன் கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Archive Link: https://archive.vn/GSPRc
Archive Link: https://archive.vn/X21Zr
Archive Link: https://archive.vn/LemML
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இவ்வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
சிங்கிள் பசங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் காதலர் தினமான இன்று(பிப்ரவரி 14) லாக்டவுன் அறிவித்ததாக பரவும் தகவல் தவறான ஒன்றாகும். ஏனெனில் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
ஆயினும் இளைஞர்கள் இவ்வாறு கோரிக்கை வைக்கும்போது முதல்வர் “உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று கூறினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது இளைஞர்கள் இதுபோன்று குறும்பாக கோரிக்கை வைப்பது இயல்பாக நடக்கும் நிகழ்வுதான்.
உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் இருக்கும்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் “அனிதாவை வெளியேற்றுங்கள்” என்று ரசிகர்கள் கத்தினர். இதேபோல் ஒருமுறை ஆரி ரசிகர்கள் “ஆரி! ஆரி! என்றும் கத்தினர்.
இதேபோல் குறும்பாக முதல்வர் பிரச்சாரத்தின்போது கோரிக்கை வைத்திருக்கலாமோ எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. ஆயினும் இதை உறுதி செய்ய வைரலாகும் வீடியோவை கூர்மையாக ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் நம்மால் சில விஷயங்களை அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவானது பாலிமர் நியூஸில் வந்த வீடியோவாகும். ஏனெனில் அவ்வீடியோவில் பாலிமர் நியூஸின் லோகோ, வாட்டர் மார்க் போன்றவற்றைக் காண முடிந்தது.

ஆகவே இவ்வாறு ஒரு செய்தி பாலிமர் நியூஸில் ஒளிப்பரப்பாகியதா என்பதை அறிய பாலிமர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களில் இதுக்குறித்துத் தேடினோம்.
நம் தேடலில் வைரலாகும் வீடியோ குறித்து பாலிமர் நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அச்செய்தியில் வைரலாகும் இவ்வீடியோ எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டு ஒன்று என்று பாலிமர் நியூஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.
கொரானா காலத்தில் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனும் அறிவிப்பு ஒன்று வந்தது. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தங்களையும் தேர்ச்சி செய்யுமாறு கேட்டதால், உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பதிலளித்ததாக இச்செய்தியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Conclusion
காதலர் தினத்தன்று லாக் டவுன் கேட்ட இளைஞர்களுக்கு, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பதிலளித்தாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Twitter Profile: https://twitter.com/shah_one_men/status/1359757851971969025?s=20
Twitter Profile: https://twitter.com/wings_twitz/status/1359735363661537281?s=20
Polimer News: https://www.youtube.com/watch?v=mQhf-PJVhYA
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)