Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தஞ்சாவூரில் ஆளும் அதிமுக அரசு இந்து மதத்திற்கு எதிராக மிகப்பெரிய சிவலிங்கத்தை உடைய கோயிலை இடிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் ஒரு பெரிய லிங்கம் இடிக்கப்பட்டு கீழே விழுகிறது.
அவ்வீடியோ உங்களுக்காக:
அதிமுக அரசின் அராஜகப் போக்கினால்தான் இதுப்போன்ற சம்பவங்கள் நடக்கின்றது. இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு உள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா என்று கேள்விக் கேட்டும், பலரும் இச்சம்பவம் குறித்து சமூக வலைத் தளங்களில் பேசி வருகின்றனர்.
சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மைக் குறித்த அறிய, இதுக்குறித்து கூகுளில் தேடினோம். அவ்வாறுத் தேடும்போது இச்சம்பவத்தின் பின்னணிக் குறித்து நம்மால் அறிய முடிந்தது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கோவில்கள் குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் புளியந்தோப்பு கிராமம் மற்றும் அக்கிராமத்தைச் சுற்றி இருந்த 70 வீடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன.
அந்த கிராமத்தில் மிக உயரமான சிவலிங்க வடிவில் ராஜகோபுரத்துடன் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவிலையும், அதையொட்டி உள்ள மாடி வீட்டையும் பொதுப்பணித்துறையினர் இடிக்க முயற்சி செய்தனர்.
ஆதிமாரியம்மன் கோவிலை இடிக்க தடைவிதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிலை இடிக்க இடைக்கால தடை விதித்தார். மேலும் பொதுப்பணித்துறையினர் பதில் அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து 14 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் ஆதிமாரியம்மன் கோவில், வீடுகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன என உயர்நீதிமன்றக் கிளையில் பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையை ஏற்று 10 வாரங்களுக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையிலேயே கோயிலும் கோயில் நிர்வாகிகள் தங்கி இருந்த வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்தச் செய்தி தினத்தந்தி, இந்து தமிழ் உள்ளிட்ட இணையத் தளங்களில் வெளிவந்துள்ளது.
சமுத்திர ஏரியை ஆக்கிரமித்துக் ஆதிமாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டிருந்தக் காரணத்தால், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அகற்றப்பட்டுள்ளது.
கோயில் மட்டுமல்ல, கோயிலைக் காரணம் காட்டி அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த வீடுகளும் மற்றக் குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
ஆகவே இதற்கும் அதிமுக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தேவை இல்லாமல் சிலர் வேண்டுமென்றே இதைத் திரித்து பேசுகிறார்கள் என்பதும் நம் விசாரணையின் மூலம் தெளிவாகியுள்ளது.
Twitter Profile: https://twitter.com/GShobna/status/1308045934173937671
Twitter Profile: https://twitter.com/Bharani_daran_/status/1308105555827851266
Youtube Video: https://www.youtube.com/watch?v=4zUxItjtGXg
Twitter Profile: https://twitter.com/sreedharbala/status/1308316657949921281
Daily Thanthi: https://www.dailythanthi.com/amp/News/Districts/2020/09/20080447/Demolition-of-Adimariamman-temple-on-Tanjore-Samudra.vpf
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/581388-the-temple-built-to-occupy-the-lake-3.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 16, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
December 2, 2024