Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது.
இலங்கையைச் சார்ந்த புகைப்படக் கலைஞரான தீக்ஷனா D. முதுஷன் என்பவர் செப்டம்பர் 19 அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புதிதாக திருமணமான தம்பதி இருவரின் புகைப்படத்தை வெளியிட்டார்.
இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இப்புகைப்படங்களைக் கண்ட இணையவாசிகள் குழந்தைத் திருமணம் என்று கிண்டலடித்தனர்.
குழந்தைத் திருமணம் என்று முதலில் கிண்டலடித்த இணையவாசிகள், பின்னர் திடீரென்று இத்தம்பதியினர் 7 மாதத்தில் பிறந்தவர்கள் என்றும் படத்தில் காணப்பட்ட ஆணுக்கு வயது 28 என்றும், பெண்ணுக்கு வயது 27 என்றும் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இந்நிகழ்வுக் குறித்து கூகுளில் தேடினோம். நம் தேடலில் இலங்கையைச் சார்ந்த தமிழ் பக்கம் எனும் இணையத்தளத்தில் இந்நிகழ்வுக் குறித்தச் செய்தி இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அச்செய்தியில், இணையத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் பொய் என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இச்செய்தியில் வைரலானப் புகைப்படத்தில் காணப்படும் மணமகனான புத்திக மகேஸ் கீர்த்திரட்ணவின் ஃபேஸ்புக் பதிவும் இணைக்கப்பட்டிருந்தது.
அப்பதிவில்,
நான் ஒரு மாதம் முன்னர் பிறக்கவில்லை, இதுப்போன்ற போலிக்கதைகளை பரப்பாதீர்கள். அதற்கு முன்னர் எனது மனைவியுடன் இணைத்து இப்படியான போலிக்கதைகளைப் பரப்பாதீர்கள். நாங்கள் உரிய வயதில் சட்டப்படி திருமணம் செய்துள்ளோம். எனது வயது 22.
என்று புத்திக மகேஸ் கீர்த்திரட்ணத் தெரிவித்துள்ளார்.
நமது விரிவான ஆய்வுக்குப்பின் வைரலாகும் புகைப்படத்தில் காணப்படும் தம்பதியினர் 7 மாதங்களில் பிறந்தவர்கள் என்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகிறது.
Twitter Profile: https://twitter.com/MohamedFahir96/status/1307656045964255232
Twitter Profile: https://twitter.com/jaav_writes/status/1307602788122320903
Theekshana D. Madushan’s Facebook Profile: https://www.facebook.com/maduruwa/posts/2786864261602614
Twitter Profile: https://twitter.com/Vettaikaran_M/status/1307549222548299778
Twitter Profile: https://twitter.com/chitti_tweets/status/1307563223621615617
Tamil Pakkam: https://www.pagetamil.com/145968/
Facebook Profile: https://www.facebook.com/thadamnews/posts/343715470376021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)