Fact Check
அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?
அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், இத்திட்டத்தை மறைந்த வாஜ்பாய் அவர்கள் 2002 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்று பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளன.
Fact Check/Verification
இமாசலப் பிரதேசத்தின் மணாலி முதல் லடாக்கின் லே பகுதி வரை 9.02 கி.மீ தொலைவுக்கு மிக நீண்ட சுரங்கப்பாதை ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சுரங்கப்பாதைக்கு முன்னாள் பாரதப் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்டப் பெற்றுள்ளது.
இந்த சுரங்கப்பாதையானது உலகிலேயே மிக நீளமான நெடுங்சாலை சுரங்கப்பாதை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பெருமைமிகு அடல் சுரங்கப்பாதையை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
சுரங்கப்பாதையை திறந்து வைத்து விட்டு மோடி அவர்கள் பேசியபோது, இந்த சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு வாஜ்பாய் அவர்கள் 2002 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் என்று கூறியதாக இந்துத் தமிழ், தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஆனால் இச்செய்தியானது முற்றிலும் தவறானத் தகவலாகும்.
உண்மை என்ன?
உண்மையில் அடல் சுரங்கப்பாதைத் திட்டமானது, சோனியா காந்தி அவர்களால் ரோதாங் சுரங்கப்பாதை திட்டம் என்ற பெயரில், 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டத் திட்டமாகும்.
இந்த நிகழ்வுக் குறித்து இந்நிகழ்வு நடந்த அதே நாளில்(28/06/2010) The Hindu, NDTV உள்ளிட்ட இணையத் தளங்களில் செய்தி வெளி`வந்துள்ளது.


உண்மையில் வாஜ்பாய் அவர்கள் 2002 ஆம் ஆண்டு இந்த சுரங்கப்பாதையின் தெற்கு வாசலை அடையக் கூடிய சாலைக்குத் தான் அடிக்கல் நாட்டினார். 180 கோடி செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2005-இல் நிறைவுற்றது.
மோடி அவர்கள் பேசும்போது இந்த அடிக்கல் நாட்டு விழாவைத் தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதைத் தவறாக, சுரங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
Conclusion
மோடி அவர்கள் அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில், வாஜ்பாய் அவர்கள் சுரங்கப் பாதையின் வாசலை அடையக்கூடிய சாலைக்கு அடிக்கல் நாட்டியதாக கூறியதை, வாஜ்பாய் அவர்கள் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் என்று கூறியதாக, திரித்துத் தவறாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது என்று நம் விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.
Result: Misleading
Our Sources
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2626149
NDTV: https://www.ndtv.com/photos/news/rohtang-tunnel-sonia-gandhi-lays-foundation-stone-7650#photo-87170
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)