ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடி.கே.சிவக்குமார் கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் பாட புத்தகத்தை கிழித்தாரா?

டி.கே.சிவக்குமார் கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் பாட புத்தகத்தை கிழித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்தார்.
Fact: வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றிருந்தாலும், யார் அடுத்த முதலைமச்சர் என்பது இழுபறியாகவே உள்ளது.

இந்நிலையில், “கர்நாடகா பள்ளி பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழிக்கபடும். இன்னும் பதவியே ஏற்கலை.. அதுக்குள்ள சம்பவம் மொரட்டு சம்பவமா இருக்கு…” என்று குறிப்பிட்டு காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ
Screenshot from Facebook/vijhai.shekar
 கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ
Screenshot from Facebook/Arulanandham M

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் இவ்வீடியோ ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முந்தைய பழைய வீடியோ என அறிய முடிந்தது.

கன்னட பாட புத்தககங்களில் சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிராக இருந்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, அதை திருத்தியமைக்க 2020-ல் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியால் திருத்தியமைக்கப்பட்ட பாட புத்தகங்களில் பகத் சிங், திப்பு சுல்தான், பெரியார், சுவாமி விவேகானந்தா, பசவன்னா, நாராயண குரு உள்ளிட்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பல்ராமின் சொற்பொழிவு சேர்க்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சென்ற வருடம் போராட்டத்தில் ஈடுபட்டன.

இப்போரட்டத்தின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மேடை ஒன்றில் பாடபுத்தகத்தை சுக்குநூறாக கிழித்தெறிந்தார். இச்சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக பரப்பட்டு வருகின்றது.

Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?

Conclusion

கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from TV9 Kannada, Dated June 18, 2022
Report from The Economic Times, Dated June 18, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular