Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக, வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பை நாங்கள் வெளியிடவே இல்லை என்று Times now குழும இயக்குனர் வினித் ஜெயின் மறுப்பு தெரிவித்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. ஒருபக்கம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்-சி வோட்டர் கருத்துக்கணிப்பினை வெளியிடும். அந்த வகையில் 2021 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ள டைம்ஸ் நவ், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் 177 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. முன்னணி செய்தி நிறுவனங்களும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், “திமுக ஜெயிக்கும் என்ற கருத்து கணிப்பை நாங்கள் வெளியிடவே இல்லை; Times Now குழும இயக்குனர் வினித் ஜெயின் மறுப்பு..இதுபோன்ற தவறான தகவல்களை திமுகவும் சன் டிவியும் மீண்டும் மேற்கொண்டால் வழக்கு தொடரப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.” என்கிற வாசகங்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Archived Link: https://archive.ph/u19pl
Archived Link: https://archive.ph/fPq6V#selection-2955.46-2955.56
Archived Link: https://archive.ph/llteK
Archived Link: https://archive.ph/vL5lG
Archived Link: https://archive.ph/3Cd2X
Archived Link: https://archive.ph/ShqIX
சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திமுக வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய டைம்ஸ்நவ் செய்தித்தளத்தில் ஆராய்ந்தோம்.
அதில், மார்ச் 24 ஆம் தேதியன்று டைம்ஸ் நவ் செய்தித்தளம், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
Archived Link: https://archive.ph/hSZFd
அதில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரையில் கிட்டதட்ட 8709 பேரிடம் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் 234 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் திமுக 177 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும், மநீம கட்சி மற்றும் அமமுக தலா 3 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையே, செய்தியாக சன் நியூஸ் இணையதளம் மார்ச் 25 அன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் நவ் தமிழக பெண் செய்தியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு உண்மைதான்; ஆனால் அதனை மறுத்து, சன் நியூஸ் மீது டைம்ஸ் நவ் இயக்குனர் வினித் ஜெயின் வழக்குத் தொடர இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது” என்று கூறினார்.
திமுக தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு அந்நிறுவன இயக்குனர் வினித் ஜெயின் மறுப்பு தெரிவித்ததாகவும், அதுதொடர்பான சன் குழுமம் மீது டைம்ஸ் நவ் வழக்கு தொடர இருப்பதாகவும் பரவும் புகைப்படம் போலியானது; தவறாக சித்தரிக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Times Now: https://www.timesnownews.com/india/tamil-nadu/article/tamil-nadu-election-opinion-poll/736700
Sun News: https://www.youtube.com/watch?v=p30LcrnLKBc&t=103s
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Ramkumar Kaliamurthy
June 4, 2025