Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மறைமுகமாக உணவு உண்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் தற்போதே களம் இறங்கி வாக்கு சேகரிப்புப் பணிகளைத் தொடங்கி விட்டது.
இந்த தேர்தல் பிரச்சாரங்களில் டிஜிட்டல் பிரச்சாரம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் சென்றடைவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சியினரை உயர்த்தியும், பிற கட்சியினரைத் தாழ்த்தியும் பல பதிவுகள் ஒவ்வொரு கட்சியினராலும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றது.
அதன் வரிசையில் தற்போது திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் மறைமுகமாக உணவு உண்டதாகக் கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
திமுக நிர்வாகிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இப்பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்பதிவுக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மறைமுகமாக உணவு உண்டதாக பரவும் பதிவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்பதிவுடன் பகிரப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் இப்புகைப்படங்கள் குறித்த சில உண்மைகளை நம்மால் அறிய முடிந்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மறைமுகமாக உணவு உண்டது உண்மையே. ஆனால் அவர்கள் திமுக நிர்வாகிகள் அல்ல. அவர்கள் உண்மையில் அதிமுக நிர்வாகிகள் ஆவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அதிமுகவினரால் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைத்தப்பட்டது.
அவ்வாறு வேலூரில் நடந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மதிய நேரத்தில் உணவு உண்டுள்ளனர். இவர்கள் உணவு உண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, அது அச்சமயம் மிகப்பெரிய செய்தியாக மாறியது.
இந்நிகழ்வு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.

இதன்படி பார்க்கையில், காவிரி பிரச்சனை காரணமாக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவினர் மறைமுகமாக உணவு உண்டப் புகைப்படங்களை பகிர்ந்து, திமுக நிர்வாகிகள் மறைமுகமாக உணவு உண்டதாக பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது என்பது நமக்கு தெளிவாகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு உண்டதாக பகிரப்படும் புகைப்படங்களில் இருப்பது திமுக நிர்வாகிகள் அல்ல என்பதையும், அவர்கள் அதிமுக நிர்வாகிகள் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/poogulali/status/1339956158342123520
Twitter Profile: https://twitter.com/GowriSankarD_/status/1339988977550442499
Indian Express: https://indianexpress.com/article/trending/trending-in-india/aiadmk-hunger-strike-lunch-break-biryani-tomato-rice-pictures-viral-5122757/
Twitter Profile: https://twitter.com/sankar_ndt/status/1340150337953415168
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 13, 2025
Ramkumar Kaliamurthy
December 11, 2025
Ramkumar Kaliamurthy
December 10, 2025